TNPSC Thervupettagam

SAHI & BODH முன்முயற்சிகள்

February 26 , 2026 17 hrs 0 min 8 0
  • இந்தியாவின் சுகாதார AI சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த, இந்திய AI தாக்க உச்சி மாநாடு 2026 இல், மத்திய சுகாதார அமைச்சர், சுகாதார முன்முயற்சிக்கான பாதுகாப்பான AI (SAHI) மற்றும் சுகாதார AIக்கான தரப்படுத்தல் திறந்தநிலை தரவுத் தளத்தை (BODH) தொடங்கினார்.
  • பொறுப்புணர்வு, தனியுரிமை பாதுகாப்பு மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட பாதுகாப்புகளை மையமாகக் கொண்டு, சுகாதாரப் பராமரிப்பில் பொறுப்பான AI ஏற்புக்கான தேசிய நிர்வாகக் கட்டமைப்பை SAHI வழங்குகிறது.
  • பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நிஜ உலகத் தயார்நிலைக்கான AI அடிப்படையில் அமைந்த சுகாதாரத் தீர்வுகளை சோதிக்கவும், தரப்படுத்தவும் மற்றும் சரி பார்க்கவும் BODH ஒரு கட்டமைக்கப்பட்டத் தளத்தை வழங்குகிறது.
  • இந்த முயற்சிகள் AI தீர்வுகள் பாதுகாப்பானவை, நம்பகமானவை, சான்றுகள் சார்ந்தவை மற்றும் மக்களை மையமாகக் கொண்டவை என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதோடு அதே நேரத்தில் அவை பொதுமக்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்துகின்றன.
  • இவை தேசிய சுகாதாரக் கொள்கை 2017 மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் (2020) ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கக் கூடிய மற்றும் அளவிடக்கூடிய டிஜிட்டல் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்