இந்தியாவின் சுகாதார AI சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த, இந்திய AI தாக்க உச்சி மாநாடு 2026 இல், மத்திய சுகாதார அமைச்சர், சுகாதார முன்முயற்சிக்கான பாதுகாப்பான AI (SAHI) மற்றும் சுகாதார AIக்கான தரப்படுத்தல் திறந்தநிலை தரவுத் தளத்தை (BODH) தொடங்கினார்.
பொறுப்புணர்வு, தனியுரிமை பாதுகாப்பு மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட பாதுகாப்புகளை மையமாகக் கொண்டு, சுகாதாரப் பராமரிப்பில் பொறுப்பான AI ஏற்புக்கான தேசிய நிர்வாகக் கட்டமைப்பை SAHI வழங்குகிறது.
பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நிஜ உலகத் தயார்நிலைக்கான AIஅடிப்படையில் அமைந்த சுகாதாரத் தீர்வுகளை சோதிக்கவும், தரப்படுத்தவும் மற்றும் சரி பார்க்கவும் BODH ஒரு கட்டமைக்கப்பட்டத் தளத்தை வழங்குகிறது.
இந்த முயற்சிகள் AI தீர்வுகள் பாதுகாப்பானவை, நம்பகமானவை, சான்றுகள் சார்ந்தவை மற்றும் மக்களை மையமாகக் கொண்டவை என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதோடுஅதே நேரத்தில் அவை பொதுமக்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்துகின்றன.
இவை தேசிய சுகாதாரக் கொள்கை 2017 மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் (2020) ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கக் கூடிய மற்றும் அளவிடக்கூடிய டிஜிட்டல் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குகின்றன.