SAKSHAM-3000 ஆனது பெரிய அளவிலான கணினித் தொகுப்புகள் மற்றும் எண்ணிம வலையமைப்புகளுக்கு ஆற்றல் அளிப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.
இது 1G முதல் 400G வரையிலான ஈதர்நெட் வேக விருப்பத் தேர்வுகளுடன் 400G இணைப்பின் 32 முனையங்கள் செயல்பட ஆதரிக்கிறது.
இது தரவு மையங்கள், 5G மற்றும் 6G வலையமைப்புகள் மற்றும் பல்வேறு செயற்கை நுண்ணறிவு பணிகளுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளது.
CROS (C-DOT திசைவி (ரௌட்டர்) இயக்க முறைமை) முறைமையில் இயங்குகின்ற இந்த சாதனமானது, பல்பிரிவாக்கம் சார்ந்த மற்றும் மிகவும் நெகிழ்வான கட்டுப்பாட்டை வழங்குகிறது.
இது தொலைத் தொடர்பு மேம்பாட்டு மையத்தினால் (C-DOT) உருவாக்கப்பட்டது.