இந்திய இராணுவம், சிந்தூர் நடவடிக்கையின் போது, உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட SAMBHAV (Secure Army Mobile Bharat Version) எனும் பாதுகாப்பான கைபேசி சூழல் அமைப்பைப் பயன்படுத்தியது.
அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புக்காக, SAMBHAV தொலைபேசிகள் WhatsApp போன்ற தளங்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டது.
5G தொழில்நுட்பத்தில் இயங்குகின்ற SAMBHAV, M-Sigma போன்ற உள்நாட்டுச் செயலிகளைப் பயன்படுத்தி முழுமையான மறைகுறியாக்கப்பட்ட தகவல் தொடர்புகளை வழங்குகிறது.
M-Sigma என்பது WhatsApp ஊடகத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாப்பான செய்தியிடல் செயலியாகும் என்பதோடு இது ஆவணங்கள், படங்கள் மற்றும் ஒளிப் படங்களைப் பாதுகாப்பாகப் பகிர அனுமதிக்கிறது.
SAMBHAV என்பது வலையமைப்பைச் சாராதது ஆகும் மற்றும் பல அடுக்கு குறியாக்கம் மற்றும் 5G நுட்பத்திற்குத் தயாரான கைபேசிகள் மூலமான நடவடிக்கை மூலம் இயங்கும் போது உடனடி இணைப்பை வழங்குகிறது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற இந்தியா-சீனா இராணுவப் பேச்சுவார்த்தைகளின் போது SAMBHAV தொலைபேசிகளும் பயன்படுத்தப்பட்டன.