தயாரிப்புப் பொருளில் புதுமை, மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான புத்தாக்க நிறுவனங்களுக்கான வழிகாட்டுத் திட்டமானது (Start-up Accelerators of MeitY for pRoduct Innovation, Development and growth [SAMRIDH] programme) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைக்கத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.
SAMRIDH திட்டமானது தங்களது தயாரிப்புப் பொருட்களை மேம்படுத்துவதற்கும் தங்களது வணிகத்தை முன்னேற்றுவதற்கான முதலீடுகளைப் பெறுவதற்கும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் தயாராக உள்ள வளர்ந்து வரும் இந்திய மென்பொருள் தயாரிப்பு புத்தாக்க நிறுவனங்களுக்கான ஒரு உகந்த தளத்தினை உருவாக்கும்.
இந்த நிலையில் புத்தாக்க நிறுவனங்களுக்குத் தேவைப்படும் நிதி உதவி வழிகாட்டல் மற்றும் இதர உதவிகளை இது வழங்கும்.