TNPSC Thervupettagam

SAPLING உரையாடல் 2026

June 18 , 2026 3 days 99 0
  • மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்கான 2026 ஆம் ஆண்டின் தெற்காசிய கொள்கைத் தலைமையின் உரையாடல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிறைவடைந்தது.
  • உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் (MoFPI) மற்றும் உலக வங்கி குழுமம் இணைந்து இந்த உரையாடலை நடத்தின.
  • இந்த உரையாடலின் கருத்துரு Unlocking Value: Advancing Food Processing for Employment Generation and Sustainable Growth in South Asia என்பதாகும்.
  • SAPLING என்பது தெற்காசியாவில் நெகிழ்வான, உள்ளடக்கிய மற்றும் ஊட்டச்சத்து-மையப்படுத்தப்பட்ட உணவு அமைப்புகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி குழுமத்தின் தலைமையிலான ஒரு பிராந்திய பல பங்குதாரர் தளமாகும்.
  • "இந்தியாவில் உணவு பதப்படுத்தும் நிலையின் மதிப்பீடு" என்ற தலைப்பிலான அறிக்கை வெளியிடப்பட்டது, இது இந்தியாவின் உணவு பதப்படுத்தும் நிலை 2016 ஆம் ஆண்டில் சுமார் 10% இலிருந்து 2023 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 17% ஆக அதிகரித்து உள்ளது என்று கூறியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்