கிராமிய கைவினைஞர் சங்கத்தின் பொருள்கள் விற்பனைக்கான 2019 ஆம் ஆண்டின் ஆஜீவிகா மேளாவானது புது தில்லியில் உள்ள இந்தியா கேட் என்ற பகுதியில் நடந்து வருகின்றது.
இந்த மேளா ஆனது தீன்தயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் (Deendayal Antyodaya Yojana-National Rural Livelihoods Mission/DAY-NRLM) ஒரு முன்முயற்சியாகும்.
இது DAY-NRLMன் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட கிராமப்புற பெண்கள் சுய உதவிக் குழுக்களை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ள இது அவர்களின் திறன்களைக் வெளிக் காட்டவும், அவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்யவும் மற்றும் அவர்களை மொத்தமாக பொருள்கள் வாங்குபவர்களுடன் இணைக்கவும் உதவும்.