சுற்றுலா அமைச்சகமானது, SASCI திட்டத்திற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்குள் சிறப்பாகக் காட்சியளிக்கும் பன்முகத்தன்மை கொண்ட சுற்றுலாத் தளங்களை உலகத் தரச்சான்றுகளுக்கு ஒப்பான மிகப்பெரும் தளங்களாக மேம்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டம் தொடர்பாக சில மாநில அரசுகளால் சமர்ப்பிக்கப்பட்ட சில திட்ட முன் மொழிவுகளின் அடிப்படையில் இந்த இடங்களானது அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்களானது தொடர்புடைய மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப் படுகின்றன.
இந்தத் திட்டங்கள் ஆனது அதிகபட்சமாக 2 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்பட்டு முடிக்கப்பட வேண்டும், அதே சமயத்தில் இந்திய அரசானது இந்தத் திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இதற்குரிய நிதியை வெளியிடும்.
SASCI என்பது 'மூலதன முதலீடுகளுக்காக மாநிலங்களுக்குச் சிறப்பு உதவி – உலக அளவில் முக்கியச் சின்னமாக உள்ள சுற்றுலா மையங்களை உருவாக்குதல்' (SASCI) என்பதைக் குறிக்கிறது.
மாம்மல்லபுரத்தில் உள்ள நந்தவனம் பாரம்பரியப் பூங்காவின் மேம்பாடு மற்றும்
நீலகிரியின் தேவலாவில் உள்ள மலர்த் தோட்டம் ஆகியன தமிழ்நாட்டில் இதில் அனுமதிக்கப் பட்ட திட்டங்களாகும்.