TNPSC Thervupettagam

SatSure மற்றும் துருவா ஸ்பேஸ் குழு

July 3 , 2025 10 hrs 0 min 9 0
  • பெங்களூருவைச் சேர்ந்த புவிக் கண்காணிப்பு (EO) புத்தொழில் நிறுவனமான SatSure மற்றும் ஐதராபாத்தில் உள்ள துருவா ஸ்பேஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து புவிக் கண்காணிப்புச் சேவை (EOaaS) தீர்வுகளை வழங்குவதற்காக கூட்டு சேர்ந்துள்ளன.
  • பாதுகாப்பு, வேளாண்மை, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆகியவற்றில் வணிக பயன்பாட்டிற்கான விண்வெளி அடிப்படையிலான தீர்வுகளை அந்த நிறுவனங்கள் உருவாக்க உள்ளன.
  • இதில் SatSure நிறுவனத்தின் துணை நிறுவனமான KaleidEO, EO சாதனங்கள் மற்றும் பகுப்பாய்வுத் தளங்களை வழங்கும்.
  • துருவா ஸ்பேஸ் நிறுவனமானது, சிறிய செயற்கைக் கோள்கள், ஏவுதல்கள் மற்றும் நிலக் கட்டுப்பாட்டு நிலையத்தின் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் நிபுணத்துவத்தை வழங்கும்.
  • இரு நிறுவனங்களும் இணைந்து ஒன்றாக, விரைவான பணி நிறைவுக் காலக் கெடுவுடன் நம்பகமான மற்றும் விரைவான முதன்மை EO சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்