பெங்களூருவைச் சேர்ந்த புவிக் கண்காணிப்பு (EO) புத்தொழில் நிறுவனமான SatSure மற்றும் ஐதராபாத்தில் உள்ள துருவா ஸ்பேஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து புவிக் கண்காணிப்புச் சேவை (EOaaS) தீர்வுகளை வழங்குவதற்காக கூட்டு சேர்ந்துள்ளன.
பாதுகாப்பு, வேளாண்மை, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆகியவற்றில் வணிக பயன்பாட்டிற்கான விண்வெளி அடிப்படையிலான தீர்வுகளை அந்த நிறுவனங்கள் உருவாக்க உள்ளன.
இதில் SatSure நிறுவனத்தின் துணை நிறுவனமான KaleidEO, EO சாதனங்கள் மற்றும் பகுப்பாய்வுத் தளங்களை வழங்கும்.
துருவா ஸ்பேஸ் நிறுவனமானது, சிறிய செயற்கைக் கோள்கள், ஏவுதல்கள் மற்றும் நிலக் கட்டுப்பாட்டு நிலையத்தின் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் நிபுணத்துவத்தை வழங்கும்.
இரு நிறுவனங்களும் இணைந்து ஒன்றாக, விரைவான பணி நிறைவுக் காலக் கெடுவுடன் நம்பகமான மற்றும் விரைவான முதன்மை EO சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.