TNPSC Thervupettagam

SAVE அமெரிக்கா சட்டம்

August 24 , 2026 11 hrs 0 min 12 0
  • அமெரிக்க வாக்காளர் தகுதியைப் பாதுகாக்கும் 'SAVE அமெரிக்கா சட்டத்திற்கு' ஆதரவு கோரிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவின் வாக்காளர் அடையாள அமைப்பை மேற்கோள் காட்டினார்.
  • இந்தியாவின் சமீபத்திய பொதுத் தேர்தலில் 646 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்ததாகவும், அதில் 1%-க்கும் குறைவானவர்களே தபால் வாக்கு மூலம் வாக்களித்ததாகவும் ட்ரம்ப் கூறினார். மேலும் சரியான புகைப்பட அடையாள அட்டை பயன்படுத்தப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
  • வாக்காளர் பதிவிற்கான குடியுரிமைச் சான்று மற்றும் அமெரிக்காவில் நாடு தழுவிய வாக்காளர் அடையாளத் தேவையை SAVE அமெரிக்கா சட்டம் முன்மொழிகிறது.
  • மேலும் இது அஞ்சல் மூலம் வாக்களிப்பதைக் கட்டுப்படுத்தவும், தேர்தல் தொடர்பான பிற விதிகளை மாற்றவும் முற்படுகிறது.
  • அமெரிக்கா பெரும்பாலும் வாக்காளர்களின் சுய சான்றளிப்பையே நம்பியுள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டைகளை உயிரிஅளவியல் தரவுத்தளங்களுடன் இணைக்கும் நாடுகளாக இந்தியா மற்றும் பிரேசிலை வெள்ளை மாளிகை சுட்டிக் காட்டியுள்ளது.
  • இந்த மசோதாவானது ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரிடையே பிளவுகளைச் சந்தித்துள்ளதுடன் ஐந்து வார விடுமுறைக்கு முன்னதாக இதனை நிறைவேற்ற அமெரிக்க செனட் சபை உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்