TNPSC Thervupettagam

SBI சக்ரா முன்முயற்சி

February 4 , 2026 14 hrs 0 min 12 0
  • வளர்ந்து வரும் தொழில்களுக்கு நிதியுதவியை வலுப்படுத்தும் நோக்கில், எஸ்பிஐ வங்கி 2026 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று ‘சக்ரா’ திட்டத்தைத் தொடங்கியது.
  • சக்ரா என்பது வளர்ந்து வரும் துறைகளுக்கான சிறப்பு மையம் என்பதைக் குறிக்கிறது.
  • வளர்ந்து வரும் மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளை மதிப்பிடுவதற்கும் நிதி ளிப்பதற்கும் தேவையான நிறுவனத் திறனை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
  • எஸ்பிஐ வங்கியானது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்சார வாகனப் போக்குவரத்து, பசுமை ஹைட்ரஜன், குறைக்கடத்திகள், மின்கலன் சேமிப்பு, கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல், திறன்மிகு உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்கள் உட்பட எட்டு வளர்ந்து வரும் துறைகளை அடையாளம் கண்டுள்ளது.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் துறைகளுக்கு 100 லட்சம் கோடி ரூபாய் மூலதனம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • சிக்கலான தொழில்நுட்பங்களை வங்கிகளால் நிதியளிக்கக் கூடிய திட்டங்களாக மாற்றுவதற்கு, சக்ரா ஒரு அறிவுசார் மற்றும் முடிவெடுக்கும் ஆதரவு மையமாகச் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்