TNPSC Thervupettagam

SBI தினம் 2025 - ஜூலை 01

July 5 , 2025 2 days 13 0
  • ஜூலை 1, 1955 அன்று உருவாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியானது (SBI), சரியாக 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
  • 1806 ஆம் ஆண்டில், கல்கத்தா வங்கி நிறுவப்பட்டது பின்னர் அது வங்காள வங்கி என மறுபெயரிடப்பட்டது.
  • இதைத் தொடர்ந்து பம்பாய் வங்கி (1840) மற்றும் மெட்ராஸ் வங்கி (1843) ஆகியவை உருவாக்கப்பட்டன.
  • 1921 ஆம் ஆண்டில், இவை மூன்றும் இணைக்கப்பட்டு இந்திய இம்பீரியல் வங்கி என்று உருவாக்கப்பட்டது.
  • ஜூலை 1, 1955 அன்று, பாரத ஸ்டேட் வங்கிச் சட்டத்தின் கீழ் ஸ்டேட் வங்கியாக இது உருவாக்கப்பட்டது.
  • பின்னர் பல்வேறு காலக் கட்டங்களில், எஸ்பிஐ வங்கியானது, பீகார் வங்கி, தேசிய லாகூர் வங்கி, கொச்சின் வங்கி, சவுராஷ்டிரா ஸ்டேட் வங்கி மற்றும் இந்தூர் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்