TNPSC Thervupettagam

SC (A) பிரிவினருக்கான முன்னுரிமை இடஒதுக்கீடு

May 15 , 2026 15 hrs 0 min 39 0
  • 2009-ஆம் ஆண்டு தமிழ்நாடு அருந்ததியர் (சிறப்பு இடஒதுக்கீடு) சட்டத்தின் கீழ் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவது குறித்து தமிழக அரசு புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
  • சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அரசு நடத்தும், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
  • பொதுப் பிரிவு மற்றும் இடஒதுக்கீடு இல்லாத இடங்களை முதலில் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதுடன் அருந்ததியர் விண்ணப்பதாரர்களும் இந்தப் பிரிவுகளில் போட்டியிடத் தகுதியுடையவர்களாவர்.
  • 18% பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) ஒதுக்கீட்டை நிரப்பும் போது, 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அரசாணை எண் 50-இன் மூலம் பரிந்துரைக்கப்பட்ட சுழற்சி முறையை கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
  • இந்த சுழற்சி முறையின் கீழ், 2, 32 மற்றும் 66 ஆகிய இடங்கள் முதலில் அருந்ததியர் (SC-A) விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படுகின்றன.
  • 2009-ஆம் ஆண்டின் சட்டம், மொத்தமுள்ள 18% பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 16% முன்னுரிமை இடஒதுக்கீட்டை வழங்குகிறது.
  • இந்த இட ஒதுக்கீடு கல்வி நிறுவனச் சேர்க்கை மற்றும் மாநில அரசுப் பணிகளுக்கான நியமனங்களுக்குப் பொருந்தும்.
  • மீதமுள்ள பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) பொது இடங்களுக்கு, அருந்ததியர்கள் உட்பட அனைத்து பட்டியலின விண்ணப்பதாரர்களும் தங்களுக்குள் இருக்கும் தகுதியின் அடிப்படையில் போட்டியிட வேண்டும்.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) பொது இடங்களில் தகுதியான அருந்ததியர் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது, எந்தச் சூழலிலும் 16% பட்டியலிடப்பட்ட சாதியினர் அருந்ததியர் (SC-A) முன்னுரிமை உள்ஒதுக்கீட்டைப் பாதிக்கக் கூடாது.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் அருந்ததியர் (SC-A) முன்னுரிமை இடங்கள் காலியாக இருந்தால், அவற்றை மற்ற பட்டியலின விண்ணப்பதாரர்களைக் கொண்டு தகுதியின் அடிப்படையில் நிரப்பலாம் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்