தமிழ்நாடு அரசானது, பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான (ST) மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவை மறுசீரமைத்துள்ளது.
இக்குழுவின் தலைவராக முதலமைச்சர் செயல்படுவதுடன் இக்குழுவில் பட்டியலிடப் பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் 59 பேர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழுவில் உள் துறை, நிதி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், உள் துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) / காவல் துறைத் தலைவர் (HoPF), மற்றும் தேசிய பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான ஆணையம் (NCSC) மற்றும் தேசிய பழங்குடியினருக்கான ஆணையம் (NCST) ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோரும் அடங்குவர்.
சமூக நீதித் துறையின் செயலாளர் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல் படுகிறார்.
பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989-ஐ செயல்படுத்துவதை ஆய்வு செய்வதற்காக, இக்குழு ஆண்டுக்கு இரண்டு முறை கூடுகிறது.
இது வன்கொடுமைகளைத் தடுப்பதற்கும், SC/ST சமூகங்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறது.