TNPSC Thervupettagam

SCADA அடிப்படையிலான நீர்த்தேக்க மேலாண்மை

January 9 , 2026 4 days 79 0
  • சென்னை நீர்த்தேக்கங்களுக்கான SCADA (மேற்பார்வைக் கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப் படுத்தல்) அடிப்படையிலான நீர்த் தேக்க மேலாண்மை அமைப்பு உடன் செயல் பாட்டுக்கு வரத் தயராக உள்ளது.
  • 32 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தினை உலக வங்கி ஆதரவுடன் நீர்வளத் துறை (WRD) செயல்படுத்துகிறது.
  • சென்னையில் உள்ள ஒரு மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மையத்திலிருந்து நீர்த் தேக்க மதகுகளை தொலைவிலிருந்து இயக்க இந்த அமைப்பு அனுமதிக்கிறது.
  • செம்பரம்பாக்கம், செங்குன்றம்/ரெட் ஹில்ஸ் மற்றும் பூண்டியில் உள்ள நீர்த் தேக்கங்களில் உணர்வுக் கருவிகள் மற்றும் தானியங்கி மழை அளவிகள் பொருத்தப் பட்டுள்ளன.
  • நீர்த்தேக்கங்கள் அனைத்திலும் ஒன்றாக சுமார் 11,175 மில்லியன் கன அடி (mcft) தண்ணீர் சேமித்து வைக்கப் பட்டுள்ளன என்பதோடு இது அவற்றின் சேமிப்பு கொள்ளளவுத் திறனில் சுமார் 95% ஆகும்.
  • வெள்ளம் மற்றும் நீர் விநியோகத்தை நிர்வகிப்பதற்காக வேண்டி நீர்வரத்து மற்றும் வெளியேற்றத்தின் நிகழ்நேரக் கண்காணிப்பை இந்த அமைப்பு ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்