SCO அமைப்பின் சட்ட மற்றும் நீதி அமைச்சர்களின் 10வது சந்திப்பு
September 10 , 2023 732 days 358 0
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பினர் நாடுகளின் சட்ட மற்றும் நீதி அமைச்சர்களின் 10வது சந்திப்பானது காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.
உறுப்பினர் நாடுகளின் சட்ட மற்றும் நீதித்துறைத் திறன்களை மேம்படுத்துவதற்கு ஆதரவை வழங்கச் செய்வதன் மூலம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு இந்தியா வழங்கிய தனது உறுதிப்பாட்டினை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பினர் நாடுகளின் சட்ட மற்றும் நீதி அமைச்சர்களின் அடுத்தச் சந்திப்பினை 2024 ஆம் ஆண்டில் கஜகஸ்தான் குடியரசில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.