கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை இந்தியா முன்னிலைப்படுத்தியது.
பயங்கரவாதத்தின் மீதான தனது சகிப்புத் தன்மையற்ற கொள்கைக்கு உதாரணமாக 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா சுட்டிக்காட்டியது.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் அல்லது அடைக்கலம் கொடுக்கும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க SCO உறுப்பு நாடுகளை இந்தியா வலியுறுத்தியது.
பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட தியான்ஜின் பிரகடனத்தை (2025) அது சுட்டிக் காட்டியது.
தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் பிராந்தியப் பயங்கரவாத தடுப்பு அமைப்பின் (RATS) பங்கை இந்தியா சிறப்பித்துக் கூறியது.