ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது அரசுத் தலைவர்கள் சபையின் உச்சி மாநாடு 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று சீனாவின் தியான்ஜினில் நடைபெற்றது.
2001 ஆம் ஆண்டில் SCO தொடங்கப்பட்டதிலிருந்து ஐந்தாவது முறையாக சீனா இந்த உச்சி மாநாட்டை நடத்தியது.
இந்த உச்சி மாநாட்டின் கருத்துரு, "Upholding the Shanghai Spirit: SCO on the Move" என்பதாகும்.
2025 முதல் 2035 ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கான பத்து ஆண்டு மேம்பாட்டு உத்தியை ஏற்றுக் கொள்வதில் இந்த உச்சி மாநாடு கவனம் செலுத்தியது.
பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு ஆகியவை இந்த உச்சி மாநாட்டில் கவனம் செலுத்தப்படும் முக்கியப் பகுதிகளாகும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) என்பது 2001 ஆம் ஆண்டு ஷாங்காய் நகரில் நிறுவப்பட்ட ஒரு பிராந்திய அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
SCO அமைப்பின் தலைமையகம் சீனாவின் பெய்ஜிங்கில் அமைந்துள்ளது.