பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 26 வது நாட்டுத் தலைவர்கள் சபையின் கூட்டத்தில், பாகிஸ்தானின் லாகூர் 2026-27 ஆம் ஆண்டிற்கான SCO சுற்றுலா மற்றும் கலாச்சாரத் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா, மக்களுக்கிடையேயான தொடர்புகள் மற்றும் SCO உறுப்பு நாடுகளின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டு முதல் இந்த அங்கீகாரம் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னர் இப்பட்டத்தைப் பெற்றவை வாரணாசி (இந்தியா), அல்மாட்டி (கஜகஸ்தான்), கிங்டாவோ (சீனா) மற்றும் சோல்போன்-அடா (கிர்கிஸ்தான்) ஆகியவை ஆகும்.
“Turning Vision into Action: Connectivity, Innovation and Shared Prosperity” என்ற கருத்துருவுடன் 2026 ஆம் ஆண்டில் SCO தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் வகிக்கிறது.
2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட SCO, 10 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது மற்றும் 2026 ஆம் ஆண்டில் அதன் 25 வது ஆண்டு விழாவைக் குறிக்கிறது.