TNPSC Thervupettagam

SCO உச்சி மாநாடு 2026

September 3 , 2026 13 days 90 0
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 26 ஆவது உச்சிமாநாடு கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்றது.
  • SCO அமைப்பின் 25 ஆண்டுகளைக் குறிக்கும் இந்த உச்சிமாநாடு, "Together for Sustainable Peace, Development and Prosperity" என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்றது.
  • "பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வாய்ப்பு" ஆகியவற்றை முக்கியத் தூண்களாகப் பிரதமர் மோடி முன்னிலைப்படுத்தினார். மேலும் நிதி உதவி, ஆட்சேர்ப்பு, தீவிரமயமாக்கல் மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் உள்ளிட்ட முழு பயங்கரவாதக் கட்டமைப்பையும் ஒழிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
  • மோதல்களைத் தீர்க்க உரையாடல் மற்றும் இராஜதந்திரத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மேலும் ரஷ்யா-உக்ரைன் மற்றும் மேற்கு ஆசிய மோதல்களுக்கு அமைதியான தீர்வு காணவும் அவர் அழைப்பு விடுத்தார்.
  • இந்த உச்சிமாநாட்டின் போது ரஷ்யா, சீனா, ஈரான், மங்கோலியா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இந்தியா இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியது.
  • SCO அமைப்பானது 1996 ஆம் ஆண்டில் "ஷாங்காய் ஃபைவ்" என்று உருவாகிய பின்னர் 2001 ஆம் ஆண்டில் SCO அமைப்பாக மாறியது. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் 2017 ஆம் ஆண்டிலும், ஈரான் 2023 ஆம் ஆண்டிலும், பெலாரஸ் 2024 ஆம் ஆண்டிலும் இணைந்தன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்