TNPSC Thervupettagam

SCO கலாச்சாரத் தலைநகரம் – லாகூர்

September 5 , 2026 10 days 95 0
  • பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 26 வது நாட்டுத் தலைவர்கள் சபையின் கூட்டத்தில், பாகிஸ்தானின் லாகூர் 2026-27 ஆம் ஆண்டிற்கான SCO சுற்றுலா மற்றும் கலாச்சாரத் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சுற்றுலா, மக்களுக்கிடையேயான தொடர்புகள் மற்றும் SCO உறுப்பு நாடுகளின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டு முதல் இந்த அங்கீகாரம் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
  • இதற்கு முன்னர் இப்பட்டத்தைப் பெற்றவை வாரணாசி (இந்தியா), அல்மாட்டி (கஜகஸ்தான்), கிங்டாவோ (சீனா) மற்றும் சோல்போன்-அடா (கிர்கிஸ்தான்) ஆகியவை ஆகும்.
  • “Turning Vision into Action: Connectivity, Innovation and Shared Prosperity” என்ற கருத்துருவுடன் 2026 ஆம் ஆண்டில் SCO தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் வகிக்கிறது.
  • 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட SCO, 10 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது மற்றும் 2026 ஆம் ஆண்டில் அதன் 25 வது ஆண்டு விழாவைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்