சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது.
பன்னாட்டுத் தீவிரவாதம் குறித்து எந்த குறிப்பிடலும் இல்லாதது குறித்து இந்தியாவின் அதிருப்தி காரணமாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
SCO சாசனத்தின் படி, முடிவுகள் ஒருமித்த கருத்தினால் எடுக்கப்படுகின்றன, மேலும் எந்த ஒரு உறுப்பினரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் மட்டுமே அந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படும்.
SCO ஆனது 2001 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஓர் அரசுகளுக்கிடையேயான குழு ஆகும்.
இந்தியா 2017 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் முழு உறுப்பினரானது.
இதன் தற்போதைய உறுப்பினர்களில் கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் மற்றும் இந்தியா ஆகியன அடங்கும்.