சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் 2025 ஆம் ஆண்டில் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிளஸ் (SCO பிளஸ்) உச்சிமாநாட்டில் உலகளாவிய ஆளுகை முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தினார்.
இந்த முன்னெடுப்பானது, இறையாண்மை சமத்துவம், சர்வதேசச் சட்டத்திற்கான மதிப்பு, பன்முகத் தன்மை மற்றும் மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகளை ஊக்குவிக்கிறது.
2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட SCO, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா உள்ளிட்ட யூரேசிய நாடுகளிடையே பிராந்தியப் பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்துகிறது.
உலகளாவிய ஆளுகை முன்னெடுப்பு ஆனது, பாதுகாப்பு, நாகரிகம் மற்றும் மேம்பாடு குறித்த, ஒரு நியாயமான மற்றும் சமநிலையான சர்வதேச ஒழுங்கு முறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஜி ஜின்பிங்கின் முந்தைய திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது.