TNPSC Thervupettagam

SDG இலக்குகளில் இந்தியாவின் முன்னேற்றம் – 2025

July 5 , 2025 14 hrs 0 min 31 0
  • SDG இலக்குகளில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்த 2025 ஆம் ஆண்டு அறிக்கை ஆனது புள்ளிவிவரங்கள் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டில் 22% ஆக இருந்த சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் பரவல் ஆனது 2025 ஆம் ஆண்டில் 64.3% ஆக உயர்ந்தது.
  • 2015-16 ஆம் ஆண்டில் சுமார் 61,247 ரூபாயாக இருந்த ஒரு தொழிலாளியின் வேளாண் வருமானம் ஆனது 2024-25 ஆம் ஆண்டில் 94,110 ரூபாயாக உயர்ந்தது.
  • கிராமப்புறங்களில் மேம்பட்ட குடிநீருக்கான அணுகல் ஆனது 2024-25 ஆம் ஆண்டில் 99.62% ஆக உயர்ந்தது.
  • மொத்த உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு 16.02 சதவீதத்திலிருந்து 22.13% ஆக உயர்ந்துள்ளது.
  • தனிநபர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் ஆனது 64.04 வாட் என்ற ஒரு அளவிலிருந்து 156.31 வாட்களாக அதிகரித்துள்ளது.
  • 2019-20 ஆம் ஆண்டில் 829 ஆக இருந்த கழிவு மறுசுழற்சி ஆலைகள் ஆனது 2024-25 ஆம் ஆண்டில் 3,036 ஆக உயர்ந்துள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் 453 ஆக இருந்த அங்கீகரிக்கப்பட்டப் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் 34,293 ஆக அதிகரித்துள்ளன.
  • 0.283 (2011-12) ஆக இருந்த கிராமப்புற கினி குணகம் ஆனது 0.237 (2023-24) ஆகவும், நகர்ப்புறம் 0.284 ஆகவும் குறைந்தது.
  • 2005 முதல் 2020 ஆம் ஆண்டு வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உமிழ்வு தீவிரம் 36% குறைந்துள்ளது.
  • 2015 ஆம் ஆண்டில் 302 மில்லியனாக இருந்த இணைய சந்தாக்கள் 2024 ஆம் ஆண்டில் 954 மில்லியனாக உயர்ந்தன.
  • 2015-16 ஆம் ஆண்டில் 17.97% ஆக இருந்த கழிவுகளின் செயல்முறையாக்கம் ஆனது 2024-25 ஆம் ஆண்டில் 80.7% ஆக மேம்பட்டது.
  • 2015 ஆம் ஆண்டில் சுமார் 21.34% ஆக இருந்த வனப்பகுதியின் பரவல் ஆனது 2023 ஆம் ஆண்டில் 21.76% ஆக அதிகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்