உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் ஆகியவை 6வது நிலையான மேம்பாட்டு இலக்கின் (SDG) கீழ் உலகளாவிய WASH (நீர், துப்புரவு மற்றும் சுகாதாரம்) முன்னேற்றம் குறித்த 2024 ஆம் ஆண்டுக் குறிப்பினை வெளியிட்டன.
SDG 6 ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் பாதுகாப்பான குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரத்திற்கான உலகளாவிய அணுகலை இலக்காகக் கொண்டுள்ளது.
2015 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், 961 மில்லியன் மக்கள் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும் குடிநீரை அணுகுவதற்கான வாய்ப்பினைப் பெற்றனர் என்ற நிலையில் இது உலகளாவிய குடிநீர் அணுகலின் பரவலை 68 சதவீதத்திலிருந்து 74% ஆக உயர்த்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, 2.1 பில்லியன் மக்கள் இன்னும் பாதுகாப்பான முறையில் வழங்கப் படும் குடிநீர் சேவைகளைப் பெறவில்லை.
அவர்களில், 1.4 பில்லியன் பேர் அடிப்படை குடிநீர் சேவைகளையும், 287 மில்லியன் பேர் வரையறுக்கப்பட்ட குடிநீர் சேவைகளையும், 302 மில்லியன் பேர் மேம்படுத்தப்படாத நீர் ஆதாரங்களையும், 106 மில்லியன் பேர் மேற்பரப்பு நீரையும் நம்பியுள்ளனர்.
2015 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மேற்பரப்பு நீரைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 61 மில்லியன் குறைந்துள்ளது.
2015 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், சுமார் 1.2 பில்லியன் மக்கள் பாதுகாப்பான முறையில் நன்கு மேலாண்மை செய்யப்படும் துப்புரவு சேவைகளை அணுகும் வாய்ப்பினைப் பெற்றனர் என்பதோடு இது உலகளாவிய துப்புரவு சேவை வழங்கீட்டினை 48% சதவீதத்திலிருந்து 58% ஆக உயர்த்தியது.
கிராமப்புறத் துப்புரவு சேவை வழங்கீடு 36 சதவீதத்திலிருந்து 49% ஆகவும், நகர்ப்புற துப்புரவு சேவை வழங்கீடு 59 சதவீதத்திலிருந்து 66% ஆகவும் அதிகரித்துள்ளது.
திறந்தவெளி மலம் கழித்தல் 429 மில்லியன் ஆகக் குறைந்துள்ளது என்ற நிலையில் நகர்ப்புறங்களில், இது தற்போது 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, 3.4 பில்லியன் மக்கள் பாதுகாப்பாக மேலாண்மை செய்யப் படும் துப்புரவு சேவையைப் பெறாமல் உள்ளனர் என்பதோடு 1.9 பில்லியன் பேர் அடிப்படை சேவைகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
உலகளவில் 354 மில்லியன் மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தொடர்ந்து பின்பற்றி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2015 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, சுமார் 1.6 பில்லியன் மக்கள் அடிப்படை சுகாதாரத்திற்கான அணுகலைப் பெற்றனர் என்ற ஒரு நிலையில் இது உலகளாவிய சுகாதார சேவை வழங்கலை 66 சதவீதத்திலிருந்து 80% ஆக அதிகரித்தது.
கிராமப்புற சுகாதார அணுகல் 52 சதவீதத்திலிருந்து 71% ஆக உயர்ந்தது அதே நேரத்தில் நகர்ப்புற அணுகல் 86 சதவீதத்தில் நிலையானதாக இருந்தது.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, 1.7 பில்லியன் மக்கள் இன்னும் அடிப்படை சுகாதார சேவைகளைப் பெறவில்லை; மேலும் 611 மில்லியன் மக்களுக்கு எந்தச் சேவையும் கிடைக்கப் பெறவில்லை.