நீடித்த வளர்ச்சி இலக்குகள் பாலினக் குறியீட்டில் மொத்தமுள்ள 129 நாடுகளில் இந்தியா 95-வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
இது சர்வதேச பாலின சமத்துவத்தை அளவிடுவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு புதியக் குறியீடாகும்.
இது பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளின் கூட்டு முயற்சியினால் “சமத்துவ அளவீடுகள் 2030” என்ற நிறுவனத்தினால் மேம்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு மதிப்பீட்டிற்கும் குறிக்கப்பட்ட இலக்குகள் தொடர்புடைய பாலின சமத்துவத்தை அடைவதை அந்தக் குறியீட்டில் உள்ள 100 மதிப்பெண்கள் பிரதிபலிக்கின்றன.
இந்தப் பட்டியலில் 89.3 என்ற மதிப்பெண்ணுடன் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் இதற்கு அடுத்து பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன.