TNPSC Thervupettagam

SEBI சீர்மை மறு ஆய்வுக் குழு

November 20 , 2025 15 hrs 0 min 17 0
  • இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) மூத்த அதிகாரிகளுக்கான ஆதாய முரண் மற்றும் வெளிப்படுத்தல் விதிகளை கடுமையாக்குவதற்காக SEBI அமைப்பு பிரத்யுஷ் சின்ஹா ​​குழுவை அமைத்துள்ளது.
  • தலைவர், முழுநேர உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு கட்டாயச் சொத்து மற்றும் பொறுப்பு வெளிப்படுத்தல்களை இக்குழு பரிந்துரைத்தது.
  • உயர்மட்டத் தலைமையை உள்பேர வர்த்தக விதிகளின் கீழ் "உள்" என்று வகைப் படுத்தவும், தனிப்பட்ட சந்தை முதலீட்டைத் தொகுக்கப்பட்ட தொழில் ரீதியாக நிர்வகிக்கப் படும் நிதிகளுக்குள் கட்டுப்படுத்தவும் அது முன்மொழிந்தது.
  • டிஜிட்டல் வெளிப்படுத்தல் பதிவேடு மற்றும் பாதுகாப்பான தகவல் பறிமாற்றப் பாதையுடன் கூடிய நெறிமுறைகள் மற்றும் இணக்க அலுவலகத்தை உருவாக்க இது பரிந்துரைத்தது.
  • ஒழுங்குமுறை விவகாரங்களில் SEBI ஆணையத்தின் முன் ஆஜராவதற்கு முன்னதாக அதன் முன்னாள் அதிகாரிகளுக்கு இரண்டு வருட அவகாச காலத்தை இது பரிந்துரை செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்