SEEDS அமைப்புடன் கைகோர்க்கும் பெப்சிகோ பவுண்டேசன் நிறுவனம்
May 7 , 2021 1654 days 665 0
நிலையான சுற்றுச்சூழல் மற்றும் சூழல்சார் மேம்பாட்டு அமைப்பு (Sustainable Environment and Ecological Development Society – SEEDS) எனும் ஒரு இலாப நோக்கமில்லாத அமைப்புடன் பெப்சிகோ பவுண்டேசன் நிறுவனம் கைகோர்த்துள்ளது.
இந்தக் கூட்டாண்மையானது கொரோனா (கோவிட்) சமுதாய நோய்த் தடுப்பு மருந்து வழங்கும் இயக்கத்தை (Community COVID-19 vaccination drive) தொடங்கவும் கொரோனா (கோவிட்) நல மையங்களை அமைக்கவும் வேண்டி தொடங்கப் பட்டுள்ளது.
இவை மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பணிகளை மேற்கொள்ளும்.
இந்தக் கூட்டாண்மையின் ஒரு அங்கமாக SEEDS அமைப்பானது தடுப்பூசி மருந்துகளை வழங்குவதையும், படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் கலன்கள் உள்ளிட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய கோவிட் நல மையங்களை அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ளும்.