SeHAT திட்டத்தின் கீழ் மருந்துகளை வீட்டிற்கே சென்று விநியோகம் செய்தல்
February 3 , 2022 1207 days 541 0
பாதுகாப்புத் துறை அமைச்சகமானது, 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில், அனைத்து ஆயுதப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இணைய வழியிலான சுகாதார உதவிகள் மற்றும் தொலைத் தொடர்பு கலந்தாய்வு சேவைகளை வழங்குதல் (SeHAT - Social Endeavor for Health and Telemedicine) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த முயற்சியில் மேலும் கூடுதலாக, SeHAT திட்டத்தின் கீழ் ஆலோசனை பெற விரும்பும் நோயாளிகளுக்கு மருந்துகளை வீட்டிற்கே சென்று விநியோகம் செய்தல் அல்லது மருந்துகளை சுயமாக எடுத்துச் செல்லுதல் போன்ற வசதிகள் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 முதல் தொடங்கப்பட்டு உள்ளன.