TNPSC Thervupettagam

SEZ கொள்கை சீர்திருத்தக் குழு

March 29 , 2026 18 days 115 0
  • சிறப்புப் பொருளாதார மண்டல (SEZ) கொள்கையில் முக்கியச் சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்க இந்திய அரசு 17 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
  • இந்தக் குழு SEZ 2.0 கொள்கைக்கான கருத்துரு மற்றும் வரைவுத் திட்டங்களைத்  தயாரிக்கும்.
  • இது SEZ சட்டம் 2005-ஐ ஆய்வு செய்து, தற்போதைய உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சூழலில் அதன் செயல்திறனை மதிப்பீடு செய்யும்.
  • SEZ-கள், ஏற்றுமதி சார்ந்த அலகுகள் (EOUs), MOOWR (கிடங்குகளில் உற்பத்தி மற்றும் இதர செயல்பாடுகள்), EPCG (ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதனப் பொருட்கள்) திட்டம், முன் கூட்டிய அங்கீகாரம் மற்றும் DFIA (வரி இல்லாத இறக்குமதி அங்கீகாரம்) போன்ற ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்களை ஒருங்கிணைப்பது குறித்து இது ஆய்வு செய்யும்.
  • இக்குழுவில் வர்த்தக அமைச்சகம், நிதி ஆயோக், DPIIT (தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை) மற்றும் CBIC (மத்திய மறைமுக வரிகள் மற்றும் கலால் வரி வாரியம்) ஆகியவற்றின் உறுப்பினர்கள் இடம் பெறுவர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்