SEZ விதிகள் 2025 - குறைக்கடத்தி மற்றும் மின்னணுக் கூறு உற்பத்தி
June 10 , 2025 280 days 226 0
ஜூன் 03 ஆம் தேதியன்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (திருத்தம்) மீதான விதிகள் 2025 ஆனது, உற்பத்தியாளர்களுக்கு நிறைவு செய்யப்பட்ட பொருட்களை இடம் பெயர்த்த அல்லது விற்பனை செய்வதற்கு அதிக சுயாட்சியை வழங்குகிறது.
குறைக்கடத்திகள் மற்றும் மின்னணுக் கூறுகளின் உற்பத்தியாளர்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் (SEZ) உள்ள சிறிய நிலப் பகுதிகளில் தொழிற்சாலை முதலியவற்றை அமைக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது.
SEZ ஆனது, குறைக்கடத்திகள் அல்லது மின்னணுக் கூறுகளை தயாரிப்பதற்காககவும் புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்காகவும் மிகவும் பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டதாகும்.
அவர்கள் தற்போது முன்னதாக இருந்த 50 ஹெக்டேர் குறைந்தபட்ச நில வரம்பிற்கு மாறாக 10 ஹெக்டேர் பரப்பில் தொழிற்சாலைகளை அமைக்க முடியும்.
பல்துறை சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், குறைந்தபட்ச நிலத் தேவை 20 ஹெக்டேரில் இருந்து நான்கு ஹெக்டேராகக் குறைக்கப் பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் சுமார் 45 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்ட இந்தியாவின் குறைக் கடத்திச் சந்தையானது 2030 ஆம் ஆண்டில் 100 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.