TNPSC Thervupettagam
February 8 , 2020 1996 days 1059 0
  • மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகமானது “பாரம்பரியத் தொழில் துறைகளை மீளுருவாக்கம் செய்வதற்கான நிதியியல் திட்டம்” (SFURTI - Scheme of Fund for Regeneration of Traditional Industries) என்ற ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், காதி, கயிறு மற்றும் கிராமத் தொழிற்துறைக் குழுக்கள் போன்ற பாரம்பரியத் தொழிற்துறைக் குழுக்களை அமைப்பதற்கு நிதியுதவி அளிக்கப்பட இருக்கின்றது.
  • இந்தக் குழுக்களின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக இந்தத் திட்டமானது முதன்முதலில் 2005 ஆம் ஆண்டில் MSME ஆல் தொடங்கப்பட்டது.
  • பின்வரும் திட்டங்கள் SFURTI உடன் இணைக்கப்பட்டுள்ளன.
    • காதி தொழில் மற்றும் கைவினைஞர்களின் உற்பத்தித் திறன் மற்றும் போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்கான திட்டம்.
    • பொருள் மேம்பாடு, வடிவமைப்பு இடையீடு மற்றும் பொதி கட்டுதலுக்கான (PRODIP - Scheme for Product Development, Design Intervention and Packaging)  திட்டம்.
    • கிராமப்புறத் தொழிற்துறை சேவை மையத்திற்கான திட்டம் (RISC - Rural Industries Service Center) மற்றும்
    • உருமாற்றும் அலகுகள், அணிவதற்கான திட்டம் போன்ற பிற சிறிய இடையீடுகள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்