மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகமானது “பாரம்பரியத் தொழில் துறைகளை மீளுருவாக்கம் செய்வதற்கான நிதியியல் திட்டம்” (SFURTI - Scheme of Fund for Regeneration of Traditional Industries) என்ற ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், காதி, கயிறு மற்றும் கிராமத் தொழிற்துறைக் குழுக்கள் போன்ற பாரம்பரியத் தொழிற்துறைக் குழுக்களை அமைப்பதற்கு நிதியுதவி அளிக்கப்பட இருக்கின்றது.
இந்தக் குழுக்களின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக இந்தத் திட்டமானது முதன்முதலில் 2005 ஆம் ஆண்டில் MSME ஆல் தொடங்கப்பட்டது.
பின்வரும் திட்டங்கள் SFURTI உடன் இணைக்கப்பட்டுள்ளன.
காதி தொழில் மற்றும் கைவினைஞர்களின் உற்பத்தித் திறன் மற்றும் போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்கான திட்டம்.
பொருள் மேம்பாடு, வடிவமைப்பு இடையீடு மற்றும் பொதி கட்டுதலுக்கான (PRODIP - Scheme for Product Development, Design Intervention and Packaging) திட்டம்.
கிராமப்புறத் தொழிற்துறை சேவை மையத்திற்கான திட்டம் (RISC - Rural Industries Service Center) மற்றும்
உருமாற்றும் அலகுகள், அணிவதற்கான திட்டம் போன்ற பிற சிறிய இடையீடுகள்.