SHAN பாதுகாப்புச் சங்கம் - லடாக் வனவிலங்கு பாதுகாப்பு
June 23 , 2026 13 days 92 0
பனிச்சிறுத்தைகள் மற்றும் குளிர் பாலைவன சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான பிரத்யேக அமைப்பாக SHAN (பனிச்சிறுத்தை மற்றும் உயரமான மலைப்பகுதிச் சூழல்) பாதுகாப்பு சங்கத்திற்கு லடாக் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள அல்பைன் விலங்கினங்கள், தாவரங்கள், ஈர நிலங்கள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய உயரமான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் இந்த சங்கம் கவனம் செலுத்தும்.
இது அறிவியல் கண்காணிப்பு, ஆராய்ச்சி, வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் மனித-வன விலங்கு மோதல்களைத் தணிக்கும் பணிகளை மேற்கொள்ளும்.
லடாக்கின் உள்ளூர்ச் சமூகங்களுக்கான சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளையும் இந்த அமைப்பு ஊக்குவிக்கும்.
பனிச்சிறுத்தைகளானது பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம் என வகைப்படுத்தப் பட்டு உள்ளன என்பதோடு இந்தியாவில் லடாக்கில் இவை மிகவும் அதிக அளவில் காணப் படுகின்றன.