2025 ஆம் ஆண்டு இந்தியாவை மாற்றுவதற்கான அணுசக்தியின் முன்னேற்றத்தின் நிலையான பயன்பாடு (SHANTI) மசோதா மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப் பட்டது.
1962 ஆம் ஆண்டு அணுசக்தி சட்டத்திற்குப் பிறகு இந்தியாவின் அணுசக்தித் துறையில் இது மிகப்பெரிய சீர்திருத்தமாகும்.
இந்த மசோதாவானது, இந்தியப் பிரதமரின் கீழ் அணுசக்தித் துறையால் (DAE) அறிமுகப் படுத்தப்பட்டது.
இது அணுசக்திச் சட்டம், 1962 மற்றும் அணு சக்தியின் சேதத்திற்கான குடிமைப் பொறுப்புச் சட்டம், 2010 (CLND சட்டம்) போன்ற பழைய சட்டங்களை மாற்றுகிறது.
இந்த மசோதா அணுசக்தியை விரிவுபடுத்துதல், தனியார் பங்களிப்பை அனுமதித்தல் மற்றும் 2047 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் (GW) அணுசக்தி திறனை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மசோதா ஒரு சுயாதீன அணுசக்திப் பாதுகாப்பு ஆணையத்தையும் தெளிவான அணுசக்திப் பொறுப்பு விதிகளையும் முன்மொழிகிறது.