TNPSC Thervupettagam
August 14 , 2025 10 days 52 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பெண்கள் அமைப்பானது SheLeads திட்டத்தின் இரண்டாவது பதிப்பானது புது டெல்லியில் நடத்தப் பட்டது.
  • பெண்களின் பொது மற்றும் அரசியல் தலைமைத்துவத் திறனை வளர்ப்பதற்காக ஐ.நா. பெண்கள் அமைப்பின் இந்திய அலுவலகம் இந்தப் பயிலரங்கினை ஏற்பாடு செய்கிறது.
  • மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டைக் கட்டாயமாக்கும் 2023 ஆம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
  • எதிர்கால தேசிய மற்றும் மாநிலத் தேர்தல்களில் போட்டியிடவும், நிர்வாகத்தில் பாலினச் சமத்துவத்தை வலுப்படுத்தவும், பெண்களை திறன்கள் மற்றும் வலையமைப்புகளுடன் சித்தப்படுத்துவதே SheLeads திட்டத்தின் நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்