இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையானது, இளம் மாணாக்கர்கள் சுகாதாரம் மற்றும் உயிரி மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்காக SHINE நிகழ்ச்சியினை (அடுத்தத் தலைமுறை ஆய்வாளர்களுக்கான அறிவியல் மற்றும் சுகாதாரப் புத்தாக்கம்) நடத்தியது.
திப்ருகரில் உள்ள ICMR-RMRCNE மற்றும் கும்ல்வங் எனுமிடத்தில் உள்ள MRHRU ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அசாம் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வானது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களை இலக்காகக் கொண்டு, ஆய்வகச் சுற்றுப்பயணங்கள், அறிவியல் கண்காட்சிகள், வினாடி வினாக்கள், செயல் விளக்கங்கள் மற்றும் ஊடாடும் அமர்வுகள் ஆகியவை நடத்தப் பட்டன.
டாக்டர் கியூரியோ என்ற உருவச் சின்னம் ஆனது, சிக்கலான அறிவியல் தலைப்புகளை எளிமைப்படுத்த உதவியது மற்றும் மாணாக்கர்களுக்குக் கற்றலை ஈடுபாட்டுடன் கூடியதாக மாற்றியது.
இந்த முன்னெடுப்பானது, 2047 ஆம் ஆண்டிற்குள் விக்ஸித் பாரதம்/ புதிய இந்தியா என்ற இந்தியாவின் தொலைநோக்கு கொள்கையுடன் ஒத்துப் போகிறது மற்றும் மாணாக்கர்களை அறிவியல் மற்றும் பொது சுகாதாரத்தில் தொழில் முறை வாழ்க்கை நோக்கி வழி நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.