தமிழ்நாடு கடலோர மீள் திறன் திட்டத்திற்கு உலக வங்கி 1,675 கோடி ரூபாயை அங்கீகரித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு கடற்கரை மீள் திறன் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் (SHORE) என்று பெயரிடப்பட்டுள்ளது.
மொத்தச் செலவில், உலக வங்கி 1,172.5 கோடி ரூபாயையும், மாநில அரசு 502.5 கோடி ரூபாயையும் பங்களிக்கும்.
இந்தத் திட்டமானது சதுப்புநிலங்கள், பவளப்பாறைகள், மணல் திட்டுகள் மற்றும் கடல் புற்கள் உள்ளிட்ட 30,000 ஹெக்டேர் அளவிலான கடல் சார் நிலப்பரப்பைப் புத்துயிர் பெறச் செய்யும்.