சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் SHRESTH முன்னெடுப்பினை அறிமுகப் படுத்தியது.
SHRESTH என்பது மாநில சுகாதார ஒழுங்குமுறை சிறப்புக் குறியீட்டைக் குறிக்கிறது.
இது வெளிப்படையான தரவு சார்ந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்தி மாநில மருந்து ஒழுங்குமுறை அமைப்புகளை தரப்படுத்தவும், மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மாநிலங்கள் அவற்றின் தற்போதைய நிலை மற்றும் மருந்து ஒழுங்குமுறையில் மேம்பட்ட நிலைச் சான்றிதழை நோக்கிய முன்னேற்றத்தை மதிப்பிட உதவும் ஒரு மெய்நிகர் இடைவெளி மதிப்பீட்டுக் கருவியாகும்.
இந்தக் குறியீடு 27 அளவீடுகளைக் கொண்ட உற்பத்தி மாநிலங்களையும், 23 அளவீடுகளைக் கொண்ட விநியோக மாநிலங்களையும் உள்ளடக்கியது.
மாநிலங்கள், இலக்கு மேம்பாடுகள் மற்றும் பன்முகக் கற்றலை ஊக்குவிப்பதற்காக முடிவுகளை மதிப்பீடு செய்து பகிர்கின்ற மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு (CDSCO) மாதாந்திரத் தரவைச் சமர்ப்பிக்கின்றன.
SHRESTH இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்துக் குடிமக்களுக்கும் மருந்து பாதுகாப்புத் தரம் மற்றும் செயல்திறனை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு உள்ளதோடு நாடு தழுவிய ஒழுங்குமுறைச் செயல்முறைகளை ஒருங்கிணைப்பதை ஆதரிக்கிறது.