TNPSC Thervupettagam
September 14 , 2025 8 days 48 0
  • இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) மற்றும் CRIF High Mark ஆகியவற்றால் இணைந்து 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சிறு வணிகம் குறித்த முக்கிய அறிக்கை வெளியிடப்பட்டது.
  • இந்தியாவின் மொத்த சிறு வணிகக் கடன் வெளியீடு என்பது ஆண்டிற்கு 19.3 சதவீதம் அதிகரித்து 2025 ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி 45.3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • 6.9 கோடி செயலில் உள்ள கடன்களுடன், இது ஆண்டிற்கு 8.7 சதவீதம் அதிகரித்து வருகிறது.
  • மகாராஷ்டிரா 6.06 லட்சம் கோடி ரூபாயுடன் மிகப்பெரிய கடன் தொகுப்பினைக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு 4.21 லட்சம் கோடி ரூபாயுடனும், குஜராத் 3.69 லட்சம் கோடி ரூபாயுடனும் அதைத் தொடர்ந்து இடம் பெற்றுள்ளன.
  • உத்தரப் பிரதேசத்தில் ஆண்டிற்கு 20.7 சதவீதம் என்ற அதிகபட்ச வளர்ச்சிப் பதிவாகி உள்ளது என்பதோடு அதன் தொகுப்புக் கடன் நிலுவை 3.61 லட்சம் கோடி ரூபாயை எட்டி உள்ளது.
  • மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகியவை முறையே 4.4 சதவீதம், 3.8 சதவீதம் மற்றும் 3.0 சதவீதம் பங்களிப்புடன் மாவட்டங்களில் முன்னணியில் உள்ளன.
  • நிலுவையில் உள்ள கடனில் 75 சதவீதத்திற்கும் அதிகமாகவும், செயலில் உள்ள கடன்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமாகவும் தனி உரிமையாளர்கள் பங்கு கொண்டு உள்ளனர் அதே நேரத்தில் நிறுவனங்கள் ஆண்டிற்கு 24.7 சதவீதமாக மிக உயர்ந்த தொகுப்புக் கடன் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்