இந்த மாத இறுதியில் சிங்கப்பூரில் நடைபெற உள்ள SIMBEX எனப்படும் சிங்கப்பூர்-இந்தியா இடையிலான 32வது இருதரப்பு கடல்சார் பயிற்சியில் இந்தியக் கடற்படை பங்கேற்க உள்ளது.
இது முன்னதாக லயன் கிங் பயிற்சி என்று அழைக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியானது, இந்தியாவின் SAGAR கொள்கை (இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) மற்றும் கிழக்கு நாடுகளுக்கு ஏற்ற வகையிலான செயல்பாட்டுக் கொள்கை ஆகியவற்றினை ஆதரிக்கிறது.
முதல் ASEAN - இந்தியா கடல்சார் பயிற்சியானது 2023 ஆம் ஆண்டில் நடைபெற்றது மற்றும் சிங்கப்பூர் கடற்படையால் இணைந்து நடத்தப்பட்டது.
இந்தியக் கடற்படையின் சமீபத்திய முக்கிய HARD மற்றும் SAR (தேடல் மற்றும் மீட்பு) நடவடிக்கைகள் அரேபியக் கடலில் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேசக் கடற்படை மதிப்பாய்வு, MILAN எனும் பன்னாட்டுக் கடற்படைப் பயிற்சி, மற்றும் விசாகப்பட்டினத்தில் IONS தலைவர்களின் மாநாடு போன்ற முக்கிய எதிர்கால கடல்சார் நிகழ்வுகளை இந்தியா நடத்த உள்ளது.