TNPSC Thervupettagam

SIMBEX 2025 – 32வது பயிற்சி

July 22 , 2025 15 hrs 0 min 37 0
  • இந்த மாத இறுதியில் சிங்கப்பூரில் நடைபெற உள்ள SIMBEX எனப்படும் சிங்கப்பூர்-இந்தியா இடையிலான 32வது இருதரப்பு கடல்சார் பயிற்சியில் இந்தியக் கடற்படை பங்கேற்க உள்ளது.
  • இது முன்னதாக லயன் கிங் பயிற்சி என்று அழைக்கப்பட்டது.
  • இந்தப் பயிற்சியானது, இந்தியாவின் SAGAR கொள்கை (இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) மற்றும் கிழக்கு நாடுகளுக்கு ஏற்ற வகையிலான செயல்பாட்டுக் கொள்கை ஆகியவற்றினை ஆதரிக்கிறது.
  • முதல் ASEAN - இந்தியா கடல்சார் பயிற்சியானது 2023 ஆம் ஆண்டில் நடைபெற்றது மற்றும் சிங்கப்பூர் கடற்படையால் இணைந்து நடத்தப்பட்டது.
  • இந்தியக் கடற்படையின் சமீபத்திய முக்கிய HARD மற்றும் SAR (தேடல் மற்றும் மீட்பு) நடவடிக்கைகள் அரேபியக் கடலில் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
  • 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேசக் கடற்படை மதிப்பாய்வு, MILAN எனும் பன்னாட்டுக் கடற்படைப் பயிற்சி, மற்றும் விசாகப்பட்டினத்தில் IONS தலைவர்களின் மாநாடு போன்ற முக்கிய எதிர்கால கடல்சார் நிகழ்வுகளை இந்தியா நடத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்