ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனமானது (SIPRI – Stockholm International Peace Reaseach Institute) 2021 ஆம் ஆண்டின் SIPRI வருடாந்திரப் புத்தகம் எனும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது ஆயுதங்கள், ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு ஆகியவை குறித்த தற்போதைய நிலையினை மதிப்பிடுகிறது.
இந்த அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய நாடானது 156 அணு ஆயுதங்களைக் கொண்டிருந்தது.
பாகிஸ்தான் அரசிடம் 165 அணு ஆயுதங்கள் உள்ளன.
சீனாவின் அணு ஆயுதக் கிடங்கில் 350 அணு ஆயுதங்கள் உள்ளன.
ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை ஒருசேர உலகின் 90% அணு ஆயுதங்களை கொண்டுள்ளன.