இவ்வறிக்கை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI - Stockholm International Peace Research Institute) எனும் ஸ்வீடனைச் சேர்ந்த சிந்தனைக் குழு அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவை அடுத்து, இரண்டாவது பெரிய அளவில் ஆயுத இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.
2011-15 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவிற்கு ஆயுதங்களை வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக ஐக்கிய அமெரிக்க நாடுகள் இருந்தது.
ஆனால் 2016-20 ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மேற்கொள்ளப் பட்ட ஆயுத இறக்குமதியின் அளவு அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளை விட 46% என்ற அளவிற்கு குறைந்துள்ளது, எனவே 2016-20 ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்க நாடு 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
உலகில் அதிகளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடு ரஷ்யா ஆகும்.
2016-20 ஆண்டுகளில் ஆயுத ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் முறையே பிரான்சும் இஸ்ரேலும் உள்ளன.