TNPSC Thervupettagam

SIR நடவடிக்கை மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு

May 31 , 2026 14 days 68 0
  • பீகாரில் தொடங்கி மற்ற மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு விரிவு படுத்தப் பட்ட, வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையின் அரசியலமைப்புச் செல்லுபடியை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
  • சரத்து 324-இன் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களுக்கு உட்பட்டதே SIR நடவடிக்கை என்றும், இது துல்லியமான வாக்காளர் பட்டியலைப் பராமரிக்க உதவுகிறது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • இடம் பெயர்தல், நகரமயமாக்கல், போலிப் பதிவுகள் மற்றும் பதிவு செய்யப்படாத இறப்புகள் வாக்காளர் பட்டியலைப் பாதிப்பதால் இந்த நடவடிக்கை நியாயப்படுத்தப் பட்டது.
  • பீகாரில், இந்த திருத்தப் பணிக்குப் பிறகு வாக்காளர் பட்டியல் 7.89 கோடியிலிருந்து 7.42 கோடி வாக்காளர்களாகக் குறைந்தது.
  • குடியுரிமை அடிப்படையில் நீக்கப்பட்ட நபர்களின் வழக்குகள், தீர்ப்புக்காக 1955-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரிகளிடம் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
  • நடைமுறை நியாயத்தை உறுதி செய்வதற்காக, நீக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடுதல், காரணங்களை வெளிப்படுத்துதல் மற்றும் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை நீதிமன்றம் கட்டாயமாக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்