இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) ஆனது, ஆதார் உடன் புதுமை மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பிற்கான திட்டத்தை (SITAA-Scheme for Innovation and Technology Association with Aadhaar) அறிமுகப்படுத்தியது.
டிஜிட்டல் அடையாள கண்டறிதல் சூழல் அமைப்பில் புதுமை, உள்நாட்டுமயமாக்கல் மற்றும் கூட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப் படுகிறது.
பாதுகாப்பான மற்றும் மேம்படுத்தக்கூடிய அடையாள தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக UIDAI உடன் ஒத்துழைப்பினை மேற்கொள்வதற்காக புத்தொழில்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையை SITAA ஊக்குவிக்கிறது.
SITAA முன்னெடுப்பின் மூலோபாய பங்குதாரர்களாக MeitY புத்தொழில் நிறுவன மையம் மற்றும் NASSCOM ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இந்தத் திட்டமானது உயிரியளவியல்/பயோமெட்ரிக் சாதனங்கள், அங்கீகார கட்டமைப்புகள், தரவுத் தனியுரிமை, செயற்கை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பான அடையாளக் கண்டறிதல் செயலிகளில் கவனம் செலுத்துகிறது.