TNPSC Thervupettagam
November 1 , 2025 2 days 46 0
  • இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் ரஷ்யாவின் யுனைடெட் ஏர் கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) ஆகியவை SJ-100 பொதுப் பயன்பாட்டுப் பயணிகள் விமானத்தைத் தயாரிப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • SJ-100 என்பது இரட்டை எஞ்சின், குறுகிய கட்டமைப்பு கொண்ட விமானமாகும் என்பதோடு இதில் 200க்கும் மேற்பட்டவை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு 16க்கும் மேற்பட்ட வணிக ரீதியான விமான நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்காக SJ-100 விமானங்களை உற்பத்தி செய்யும் உரிமை HAL நிறுவனம் கொண்டிருக்கும் என்பதால், அது அவற்றை முழுமையாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும்.
  • 1961 முதல் 1988 ஆம் ஆண்டு வரையிலான HAL நிறுவனத்தின் AVRO HS-748 திட்டத்திற்குப் பிறகு இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் முழுமையான பயணிகள் விமானம் இதுவாகும்.
  • அடுத்தப் பத்து ஆண்டுகளில், பிராந்தியப் போக்குவரத்து இணைப்புக்காக இந்தியாவிற்கு 200க்கும் மேற்பட்ட ஜெட் விமானங்களும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கு கூடுதலாக 350 விமானங்களும் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்