TNPSC Thervupettagam

SKOCH மாநாடு & விருதுகள்

December 25 , 2018 2364 days 691 0
  • 55-வது SKOCH மாநாடு சமீபத்தில் புதுடெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்புச் சங்கத்தில் நடத்தப் பட்டது.
  • இது சமூகப் பொருளாதாரச் சிக்கல்களுடன் உள்ளடக்கிய வளர்ச்சியின் மீது கவனம் செலுத்தும் சிந்தனைச் சாவடியான SKOCH குழுவால் நடத்தப்படுகிறது.
  • இந்நிகழ்ச்சியில் இந்தியா 2030 எனும் தலைப்பிலான புத்தகமொன்றும் வெளியிடப்பட்டது.
  • மேற்கு வங்காள மாநிலமானது பல்வேறு துறைகளில் 31 SKOCH விருதுகளை தனது திறமைக்காக வென்றது.
பிரிவு வெற்றியாளர்
SKOCH-ன் ஆண்டிற்கான சிறந்த முதல்வர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி
SKOCH-ன் ஆண்டிற்கான சிறந்த நிர்வாகி K.T. ராமா ராவ்
SKOCH-ன் புருலியா நீர்மின் திட்டத்திற்கான விருது மேற்கு வங்காள மாநில மின் விநியோக நிறுவனம் லிமிடெட்
SKOCH-ன் கோல்டன் ஜூபிலி சேலஞ்சர் விருது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு
SKOCH-ன் ஆண்டிற்கான சிறந்த தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நரா லோகேஷ்
SKOCH-ன் ஆண்டிற்கான ஸ்பிரிண்டர் விருது ஆந்திரப் பிரதேச முதல்வர்  M. சந்திரபாபு நாயுடு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்