கச்சார் துணை ஆணையர் கீர்த்தி ஜல்லி என்பவருக்கு SKOCH தேசிய வெள்ளி விருதானது வழங்கப்பட்டுள்ளது.
தினாத்பூர் பகிச்சா என்ற கிராமத்திலுள்ள வீடுகளில் ஊட்டச்சத்து நிறைந்த தாவரத் தோட்டங்களை அமைப்பதற்கான மாற்றம் மற்றும் மேம்பாடு குறித்த ஒரு ஒருங்கிணைந்தத் திட்டமான “புஷ்தி நிர்போர்“ (ஊட்டச்சத்து சார்ந்த) எனும் அவரது திட்டத்திற்காக வேண்டி இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கிராமமானது இந்திய வங்காளதேச எல்லைக்கு அருகே உள்ள கச்சார் எனும் மாவட்டத்தின் கட்டிகோரா என்ற வட்டத்தில் அமைந்துள்ளது.
2003 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட SKOCH விருதானது, இந்தியாவை ஒரு சிறந்த நாடாக உருமாற்றப் பாடுபடும் மக்கள், திட்டங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோருக்கு ஒரு கௌரவத்தை அளிக்கிறது.